சங்கனூர் கண்ணப்பநகர் அடுத்த முத்துமாரியம்மன் கோவிலில் உண்டியல் திருடு போய் இருப்பது தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: சங்கனூர் கண்ணப்பநகர் அடுத்த முத்துமாரியம்மன் கோவிலில் உண்டியல் திருடு போய் இருப்பது தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சங்கனூர் கண்ணப்பநகர் அடுத்த பத்தாவது வீதியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுப்பிரமணி என்பவர் பூசாரியாகப் பணி புரிந்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பூஜைகளை முடித்து விட்டு சுப்பிரமணி கோவிலைப் பூட்டி விட்டு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மறுநாள் காலை வந்து பார்த்த பொழுது கோவில் உண்டியல் திருடு போய் இருப்பது தெரிய வந்தது.
மேலும் கோவில் உண்டியலில் 20-ஆயிரம் ரூபாய் வரை பணம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த கிராமத்தின் தலைவரின் மனைவி லட்சுமி அம்மாள் இதுகுறித்து, ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.