வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் பேரூராட்சி பகுதியில் அ.தி.மு.க வில் இருந்து விலகி 300-பேர் தி.மு.க வில் இணைந்தனர்.
கோவை: பொள்ளாச்சி வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் பேரூராட்சி பகுதியில் அ.தி.மு.க-வில் இருந்து விலகி 300-பேர் தி.மு.கவில் இணைந்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பேரூராட்சி வால்பாறை சட்டமன்ற தொகுதியாகும். முன்னாள் கோட்டூர் பேரூராட்சி துணைத் தலைவர் அஜிஸ் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க-விலிருந்து விலகி தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் டாக்டர் மகேந்திரன், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் தலைமையில் தி.மு.க வில் இணைந்தனர்.
டாக்டர் மகேந்திரன் கூறுகையில், பொள்ளாச்சி நகராட்சி, வால்பாறை நகராட்சி மற்றும் ஐந்து பேரூராட்சிகளில் அதிக ஓட்டு பெற்ற தி.மு.க வெற்றி பெறும் எனவும், மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆறுமாத கால ஆட்சியில் தேர்தல் அறிவித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருவதால் பிற கட்சியிலுள்ள பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் தி.மு.க வில் இணைந்து வண்ணம் உள்ளனர் எனத் தெரிவித்தார்.
இதில் கோட்டூர் நகர தலைவர் பால்ராஜ் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் யுவராஜ் அரசு வழக்கறிஞர் சேனாதிபதி, தென் சங்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாதுரை, ஏ.ஆர்.வி, சாந்தலிங்க குமார், பொள்ளாச்சி நகர துணைத் தலைவர் கார்த்திகேயன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.