பொள்ளாச்சியில் விடிய விடிய பெய்த கனமழையால் கோயில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதம்..!

மழையால் இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை சீரமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சியில் விடிய விடிய பெய்த கனமழையால் அமைதி நகரில் உள்ள மதுரைவீரன் கோயில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து உள்ளது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், பொள்ளாச்சி பகுதியில் நேற்று இரவு விடிய விடிய கன மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். அதிகப்படியாக பொள்ளாச்சியில் 56 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

இந்த நிலையில், பொள்ளாச்சி நகராட்சி 35வது வார்டு அமைதி நகர் பகுதியில் உள்ள மதுரை வீரன் கோவில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சுற்றுச் சுவர் முழுவதும் சேதமடைந்தது. மழையால் இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை சீரமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...