வன்னியர்களுக்கான 10.5-சதவீத இட ஒதுக்கீடு சட்டம் ரத்து!

எந்த விதமான புள்ளி விவரங்களும் இல்லாமல் வன்னியர்களுக்கு 10.5-சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாகவும், சுமார் 60-ஆயிரம் வேலை வாய்ப்புகளை பாதுகாக்கும் வகையில் நீதிமன்றத்தின் உத்தரவு வெளியாகியுள்ளதாக பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்கான கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.



கோவை: எந்த விதமான புள்ளி விவரங்களும் இல்லாமல் வன்னியர்களுக்கு 10.5-சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாகவும், சுமார் 60-ஆயிரம் வேலை வாய்ப்புகளை பாதுகாக்கும் வகையில் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் உத்தரவு வெளியாகியுள்ளதாகவும் பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்கான கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.



கோவையில் பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரத்தினசபாபதி இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது வன்னியருக்கு 10.5- சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்கு தொடுத்து இருந்த நிலையில் இன்று நீதிமன்றம் பேராணை வழங்கியிருக்கின்றது என தெரிவித்தார்.

பிற்படுத்தப்பட்ட ஆணையத்திற்குக் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே தலைவராக இருக்கின்றனர் என கூறிய அவர், கடந்த அதிமுக அரசு எந்த சட்டத்திற்கும் உட்படாமல் தேர்தலுக்காக, அரசியலுக்காக வன்னியருக்கு 10.5-சதவீத இட ஒதுக்கீட்டை 1985-அம்பாசங்கர் அறிக்கையின் அடிப்படையில் வழங்கியது என தெரிவித்தார்.

பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தில் ஒரு அரசுப்பணி கூட பெறாத 28-சமூகங்கள் இன்னமும் இருக்கின்ற நிலையில், கடந்த அரசு கொண்டு வந்த இந்த சட்டம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என தெரிவித்தார். எந்த புள்ளி விபரங்களும் இல்லாமல் குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் 10.5-சதவீதம் கொடுத்து அதிமுக அரசு கொண்டு வந்த சட்டம் நியமற்றது என தெரிவித்த அவர், இந்த விவகாரத்தில் அதிமுக அரசு பிழைகள் செய்து இருக்கின்றது என தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் நீதிமன்றம் பேராணை வழங்கி இருக்கின்றது என தெரிவித்த அவர், இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் அதை எதிர்த்து சட்டரீதியாகப் போராடுவோம் எனவும் தெரிவித்தார். விரைவில் தமிழகத்தில் 60-ஆயிரம் வேலை வாய்ப்பு உருவாக இருக்கின்றது என்றும் அந்த வேலை வாய்ப்பு பறிபோகாமல் இந்த தீர்ப்பு தடுத்து இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.



இந்த முறை சரியாக கவனிக்காமல் விட்டால் அடுத்த 30-ஆண்டுகளுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான அரசு வேலை வாய்ப்புகள் பறிபோகும் எனவும் தெரிவித்த அவர், இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக முதல்வரை சந்திக்க முயன்றும் சந்திக்க முடியவில்லை எனவும், பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பினரை இது வரை சந்திக்காதது வருத்தம் அளிக்கின்றது எனவும் தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பின் போது அந்த அமைப்பின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...