கோவையில் பேருந்தில் வைத்திருந்த கலெக்ஷன் பணத்தை திருட முயன்ற வாலிபர் கைது..!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த முகம்மது மஜீத் என்ற வாலிபரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் பேருந்தில் வைத்திருந்த கலெக்ஷன் பணத்தை திருட முயன்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த காளியப்பன் என்பவரின் மகன் பாலுசாமி (45). இவர் கோவையில் இருந்து சேலம் செல்லும் அரசு பேருந்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு பேருந்து பயணிகள் செலுத்திய பயண கட்டண கலெக்சன் பணத்தை பேருந்தில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு உறங்கச் சென்றார்.

இந்த நிலையில், அதிகாலை 4 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் பணம் வைத்திருந்த பெட்டியை உடைத்து பணத்தை திருட முயற்சித்த சத்தம் கேட்டு டிரைவர் பாலுசாமி எழுந்தார். உடனே அவர் சத்தம் போட்டு அருகில் உள்ளவர்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து காட்டூர் போலீசார் நடத்திய விசாரணையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த அக்பர் அலி என்பவரின் மகன் முகம்மது மஜீத் (21) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அந்த வாலிபரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...