கோவையில் 97.3-சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி.!!

கோவை மாவட்டத்தில் கொரோனா முதல் தவணை தடுப்பூசியை 97.3-சதவீதம் பேரும், 2-தவணை தடுப்பூசியை 43-சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா முதல் தவணை தடுப்பூசியை 97.3-சதவீதம் பேரும், 2-தவணை தடுப்பூசியை 43-சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதியிலிருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வந்த தடுப்பூசி ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி கோவை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 97.3-சதவீதம் பேரும், 2-தவணை தடுப்பூசியை 43-சதவீதம் பேரும் செலுத்திக்கொண்டுள்ளனர். அதிகளவு தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களின் பட்டியலில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாகச் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் 38-லட்சத்து 67-ஆயிரத்து 296-போ் உள்ளனர். இவர்களில் 18-வயதுக்கு மேற்பட்டவர்கள் 27-லட்சத்து 90-ஆயிரத்து 400-போ் உள்ளனர். இதில் 27-லட்சத்து 16-ஆயிரத்து 992- போ் (97.3 சதவீதம்) முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

12-லட்சத்து 4-ஆயிரத்து 524-போ் (43.1 சதவீதம்) 2-ஆம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 2-ஆம் தவணை தடுப்பூசிக்கு காத்திருப்பவர்களின் கைப்பேசி எண்ணுக்கு அழைத்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

விரைவில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 99-சதவீதமாக உயரும் என்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...