கோவை ஆர்.எஸ். புரம் உழவர் சந்தை அருகே பட்டாசுக் கடை அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு..!

தினசரி 150க்கும் மேற்பட்ட விவசாயிகள், 3000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் இடமாக உள்ளதால் அசம்பாவிதம் நடந்து விடுமோ என அச்சமடைந்துள்ளனர்.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை அருகில் பட்டாசுக் கடை அமைப்பதற்கு விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை மாநகரின் மத்தியில் இருப்பதால் அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். தினசரி 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் இடமாக உள்ளது.

இதனிடையே, சந்தைக்கு அருகிலேயே பட்டாசுக் கடை போடப்பட்டுள்ளதால் சந்தைக்கு வரும் வியாபாரிகள் வாடிக்கையாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,

"இதுவரை உழவர் சந்தை அருகில் பட்டாசுக்கடை அமைக்கப்பட்டது இல்லை. தற்போது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, உரிமம் பெற்று உழவர் சந்தை அருகிலேயே கடை அமைக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடம் என்பதால் அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது" என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...