பொள்ளாச்சியில் தரமற்ற முறையில் தயாரித்து விற்பனைக்காக வைத்திருந்த 780 கிலோ இனிப்பு வகைகள் அழிப்பு.!!

சுகாதாரமற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்த, 780 கிலோ எடையுள்ள, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இனிப்பு வகைகள் அழிப்பு. மேலும், பயன்படுத்திய எண்ணெய்யை, பயோ டீசலாக மாற்ற கொடுக்க, 90877-90877, 84455-17187, 73395 -30143 ஆகிய மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


கோவை: பொள்ளாச்சியில் தரமற்ற முறையில் பழைய செய்தித்தாள்களை உபயோகப்படுத்துதல், அளவுக்கு அதிகமான செயற்கை நிறமிகள் பயன்படுத்துதல் மற்றும் சுகாதாரமற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்த, 780 கிலோ எடையுள்ள, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இனிப்பு மற்றும் கார வகைகள் பறிமுதல்

பொள்ளாச்சி பகுதியில் நடத்திய ஆய்வில், தரமற்றதாக கண்டறியப்பட்ட, இனிப்புகளை உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர். உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் உத்தரவின் பேரில், தீபாவளியை முன்னிட்டு துறை அதிகாரிகள் தொடர் கள ஆய்வில் ஈடுபடுகின்றனர்.

பொள்ளாச்சி நகரிலுள்ள இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், உணவகங்கள், பேக்கரிகள் ஆகியவற்றில், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தமிழ்செல்வன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுப்புராஜ், வேலுசாமி ஆகியோர் அடங்கிய குழு நேற்று ஆய்வு நடத்தியது.

இதில், கோவை ரோடு, உடுமலை ரோடு, ராமகிருஷ்ணா நகர், ஜோதிநகர், சூளேஸ்வரன்பட்டி, மீன்கரை ரோடு, மார்க்கெட் ரோடு, வெங்கடேசா காலனி, பெருமாள் செட்டி வீதி, ஆகிய பகுதிகளில், 18 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், பழைய செய்தித்தாள்களை உபயோகப்படுத்துதல், அளவுக்கு அதிகமான செயற்கை நிறமிகள் பயன்படுத்துதல் மற்றும் சுகாதாரமற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்த, 780 கிலோ எடையுள்ள, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இனிப்பு மற்றும் கார வகைகள் பறிமுதல் செய்தனர்.

அவற்றை, மண்ணில் குழி தோண்டி, பினாயில் ஊற்றி புதைத்து அழித்தனர். இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கும் இடம், மற்றும் விற்பனை செய்யும் இடத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருப்பதோடு, உணவுப் பண்டங்களைத் தரமாகத் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும்.

கள ஆய்வில், அளவுக்கு அதிகமான இனிப்பு வகைகள் மற்றும் லேபிள் விவரங்கள் சரியாக அச்சிடப்படாமல், மறுபொட்டலமிட்ட கார வகைகளிலிருந்து உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது.

பகுப்பாய்வின் முடிவின்படி சம்பந்தப்பட்ட உணவு நிறுவனங்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறியதாவது:-

பால் பொருட்களால் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகள், ஒன்று முதல் நான்கு நாட்கள் மட்டுமே உண்ணத்தகுந்ததாக இருக்கும். அதற்கு மேல், பாக்டீரியா படிந்து, விஷத்தன்மையுள்ளதாக மாறி விடும்.

எனவே, அன்றைக்குத் தயாரித்து விற்று விட வேண்டும். ஒரு முறை உபயோகித்த சமையல் எண்ணெய்யை மீண்டும் உணவு தயாரிக்கப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். உணவகங்கள், பேக்கரிகள், மற்றும் துரித உணவு உற்பத்தியாளர்கள் ஆகியோரை கண்காணிக்கவும், ஒருமுறை உபயோகித்த சமையல் எண்ணெய்யை சேகரித்து அதிலிருந்து மறு சுழற்சி முறையில் பயோ-டீசல் உற்பத்தி செய்யும் திட்டத்தை மாநில உணவுப் பாதுகாப்புத் துறை வாயிலாகச் செயல்படுத்தப்படுகிறது.-

பயன்படுத்திய எண்ணெய்யை, பயோ டீசலாக மாற்ற கொடுக்க, 90877- 90877, 84455- 17187, 73395- 30143 ஆகிய மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...