ஆதிமாதையனூர் கிராமத்தில் நேற்று இரவு விவசாய தோட்டத்தில் நுழைந்த சிறுத்தை பத்து மாத கன்றுக் குட்டியைத் தாக்கி தூக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: மேட்டுப்பாளையம் அருகே ஆதிமாதையனூரில் விவசாய தோட்டத்தில் நுழைந்து பத்துமாத கன்றுக்குட்டியைத் தாக்கிய சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியான மேல்பவி, நீலம்பதி, ஆதி மாதையனூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவார பகுதியான இங்கு கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
இந்நிலையில், ஆதிமாதையனூர் கிராமத்தினை சேர்ந்த ஆனந்தன் என்பவர் பசுமாடுகள் வளர்த்து வரும் நிலையில், நேற்று இரவு இவரது தோட்டத்தில் நுழைந்த சிறுத்தை ஒன்று அவர் வளர்த்து வந்த பத்து மாத கன்றுக் குட்டியைத் தாக்கி தூக்கிச் சென்றுள்ளது.

அப்போது, கன்றின் அலறல் சப்தம் கேட்டு கிராம மக்கள் சிலர் சிறுத்தையைத் துரத்திச் சென்று உள்ளனர். சிறிது தூரம் சென்று அந்த சிறுத்தைப்புலி கன்றுக்குட்டியை அங்கேயே விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் சென்று மறைந்துள்ளது இதுகுறித்து காரமடை வனத் துறையினரிடம் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர், அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் குறித்து அதன் கால்தடங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் குடியிருப்புகளுக்குள் வரும் சிறுத்தையை வனத்துறை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.