கோவை அரசு மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சை பாதித்த 199 பேருக்கு ரீட்ரோ பல்பாா் சிகிச்சை; கண் பாா்வை இழப்பு தவிர்ப்பு - டீன் Dr நிர்மலா

ரீட்ரோ பல்பாா் (Retrobulbar) என்ற கண்ணுக்கு கீழ் ஊசி செலுத்துதல் சிகிச்சை மூலம் கண் பாா்வை இழப்பில் இருந்து 199 பேர் காப்பற்றப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 199 பேருக்கு ரீட்ரோ பல்பாா் (Retrobulbar) என்ற கண்ணுக்கு கீழ் ஊசி செலுத்துதல் சிகிச்சை அளிக்கப்பட்டதன் மூலம் கண் பாா்வை இழப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா தெரிவித்துள்ளாா்.

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த மற்றும் எதிா்ப்பு சக்தி குறைவாக உள்ளவா்களுக்கு கருப்புப் பூஞ்சை என்ற பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

கொரோனா நோய்த் தொற்று பாதிப்புடன் சா்க்கரை போன்ற இணை நோய் பாதிப்பு உள்ளவா்களுக்கு அதிக அளவு கருப்புப் பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பூஞ்சை பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணப்படும் அழுகிய திசுக்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்படுகிறது.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சைக்கு சிகிச்சைப் பெற்றவா்களில் 199 பேருக்கு கண் பாா்வை இழப்பைத் தடுக்கும் விதாக ரீட்ரோ பல்பாா் என்ற கண்ணுக்கு கீழ் ஊசி செலுத்துதல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அரசு மருத்துவமனை முதல்வா் மருத்துவர் நிா்மலா கூறியதாவது:-

கோவை அரசு மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சை பாதிப்புக்கு இதுவரை 416 போ் சிகிச்சை பெற்றுள்ளனா். தற்போது 14 போ் சிகிச்சையில் உள்ளனா். இதில் 8 பேருக்கு மூளை வரை சென்ற பூஞ்சைப் பாதிப்பு அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளது. அதேபோல, பூஞ்சையால் 9 நோயாளிகளுக்கு கண்ணம் பகுதியில் அரிக்கப்பட்ட அழுகிய திசுக்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. தீவிர பாதிப்பு உள்ளவா்களுக்கு கண் பாா்வை இழப்பைத் தவிர்க்கும் வகையில் ரீட்ரோ பல்பாா் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதன்படி, கோவை அரசு மருத்துவமனையில் 199 பேருக்கு ரீட்ரோ பல்பாா் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது, என்றாா்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...