ஒன்றிய அரசின் தொடர் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து டிசம்பர் 10-ம் தேதி பத்து நிமிடம் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தும் போராட்டத்தை சிஐடியு மாநில நிர்வாகக்குழு அறிவித்துள்ளது.
கோவை: ஒன்றிய அரசின் தொடர் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து டிசம்பர் 10 -ம் தேதி பத்து நிமிடம் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தும் போராட்டத்தை சிஐடியு மாநில நிர்வாகக்குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்திரராஜன் கூறுகையில்,
ஒன்றிய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இதனை எதிர்த்து சிஐடியு அனைத்து மாவட்டங்களிலும் சைக்கிள் யாத்திரை, மாட்டு வண்டி பேரணி உள்ளிட்ட வடிவங்களில் தொடர்ந்து நடத்துவது.
தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக தொடர்ந்து டிசம்பர் 10 -ம் தேதி பத்து நிமிடம் வாகனத்தை நிறுத்து போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். இதில் அனைத்து அமைப்புகளையும் பங்கேற்க செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க உள்ளோம்.
டிசம்பர் 10-ம் தேதி காலை 12 -மணி முதல் 12.10 மணிவரை பத்து நிமிடங்கள் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தி ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்க பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தை வெற்றிகரமாக்கிட சிறுசிறு குழுக்களை அமைத்து அனைத்து பெட்ரோல் பங்குகள் மற்றும் டோல்கேட்டுகள், டிராபிக் சிக்னல்கள் என போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் துண்டு பிரசுரங்களை விநியோகிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதர அமைப்புகளுடன் பேசி இப்போராட்டத்தை வலுவான போராட்டமாக முன்னெடுக்க இருக்கிறோம் என்றார்.