கோவை ரத்தினபுரி அருகே மசாஜ் சென்டரில் விபசாரம்: ஒருவர் கைது - 3 இளம்பெண்கள் மீட்பு..!

மசாஜ் சென்டரில் விபசாரம் செய்த ஒருவரை கைது செய்த போலீசார் 3 இளம்பெண்கள் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.


கோவை: கோவை ரத்தினபுரி அருகே மசாஜ் சென்டரில் விபசாரம் செய்த ஒருவரை கைது செய்த போலீசார் 3 இளம்பெண்கள் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

கோவை ரத்தினபுரி டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோடு டாக்டர்ஸ் காலனி பகுதியில் ஹனி ஸ்பா என்ற பெயரில் மசாஜ் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஜான் ஜெரால்டு என்பவர் மசாஜ் செய்வதற்காக நேற்று மதியம் சென்றார்.

அப்போது, அங்கு இருந்த நபர் ஒருவர் ஜான் ஜெரால்ட் இடம் கூடுதலாக பணம் கொடுத்தால் இளம் பெண்களிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி பெண்களை காட்டியுள்ளார்.

இதையடுத்து, ஜான் ஜெரால்டு பணம் எடுத்துவிட்டு வருவதாக கூறி ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அந்த மசாஜ் சென்டருக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரிய வந்தது.

இதனையடுத்து, அந்த மசாஜ் சென்டரை நடத்தி வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் ராஜு ராஜ் (31) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், அங்கு விபச்சாரத்திற்காக தங்க வைக்கப்பட்டிருந்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 38 வயது பெண், சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண், கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த 28 வயது பெண் ஆகிய மூன்று பெண்களையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...