கோவை தொண்டாமுத்தூர் அருகே ஒற்றை யானை தாக்கி முதியவர் பலி; யானை நடமாட்டம் உள்ளதால் உடலை மீட்பதில் தாமதம்...!

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள அட்டுக்கல் பகுதியை சேர்ந்த 80 வயதான ஆதிவாசி ஒருவர் காளான் பறிக்க சென்ற போது ஒற்றை யானை மிதித்து பலி. மழையால், உடலை மீட்க்கும் பணியில் தொய்வு.



கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள அட்டுக்கல் ஆதிவாசிகள் பகுதியை சேர்ந்த 4 பேர் தொடர் மழை காரணமாக அப்பகுதியில் காளான் அதிக அளவில் காணப்பட்டதால் தினந்தோறும் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்று காளான் பறித்து வந்தனர். 

இந்நிலையில் வழக்கம் போல் இன்று அதிகாலை அடர்ந்த வனப் பகுதிக்குள் முட்புதர்கள் அதிகம் உள்ள பகுதியில், காளான் பறிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்குள்ள புதருக்குள் மறைந்து இருந்த ஒற்றை காட்டு யானையை பார்த்து அலறியடித்து ஓட தொடங்கினர். இதில், 80 வயது வெள்ளியங்கிரி என்பவர் யானையிடம் சிக்கிக் கொண்டார். 

80 வயதான வெள்ளியங்கிரியை யானை துதிக்கையால் தூக்கி அடித்து கொன்றதாக உடன் சென்றவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், தொடர் மழை மற்றும் யானைகள் நடமாட்டம் உள்ளதால், உடலை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர். 

மேலும் மாலை நேரம் என்பதால் வெளிச்சமின்மை மற்றும் அட்டுக்கல் வனப்பகுதியில் மழை பெய்து வருவதால், நாளை காலை தான் இறந்த முதியவரின் உடலை எடுக்கும் பணி நடைபெறும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...