வால்பாறையில் சாலையில் கொட்டப்படும் கட்டிட கழிவுகளால் விபத்து ஏற்படும் அபாயம்..!

சாலை ஓரங்களில் கட்டிடக்கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும் தக்க நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவை: வால்பாறையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு காரணமாக இடையூறின்றி போக்குவரத்து நடைபெற பல்வேறு சாலைகள் நெடுஞ்சாலை துறையினரால் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இதேபோல, வால்பாறை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு வசதியாக பல்வேறு இடங்களில் காட்டேஜ்கள் கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டிடப் பணிகள் நடைபெறும் இடங்களில் தோண்டப்படும் மண் கற்கள் மற்றும் பல்வேறு கட்டிட கழிவுகள் வால்பாறை நகரில் வெளிப்புறங்களில் உள்ள சாலை ஓரங்களில் கொட்டப்பட்டு வருகின்றன. 

இதனிடையே, வால்பாறையில் இருந்து சின்னக்கல்லாறு செல்லும் சின்கோனா சாலை பெரும்பகுதி விரிவாக்கப் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. 



இந்நிலையில், வால்பாறை காமராஜ் நகர் பகுதியில் நடைபெறும் கட்டிட பகுதியில் கிடைக்கும் கட்டிட கழிவுகள் டிப்பர் லாரிகள் மூலம் வால்பாறை சின்னக்கல்லாறு சாலையிலுள்ள கூலாங்கல் ஆற்றை ஒட்டியுள்ள பிரதான சாலை ஓரங்களில் கொட்டப்பட்டு வருகின்றன. இப்படி கொட்டப்படும் கட்டிட கழிவுகள் சில இடங்களில் பாதி சாலைகளை மறைத்து உள்ளன. 

சிறுகுன்றா தேயிலைத் தோட்ட இடைச்சோலை அருகே உள்ள வளைவில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகள் சாலையின் நடுப்பகுதிவரை சாலையை ஆக்கிரமித்து உள்ளது. இதன் காரணமாக இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் இந்த மண் மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். 

மேலும், இப்பகுதியில் நடைப்பயிற்சி செல்பவர்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகவே, நெடுஞ்சாலை துறையினர் இந்த கட்டிட கழிவுகளை அகற்றவும் சாலை ஓரங்களில் கட்டிடக்கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும் தக்க நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...