தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நூதன போராட்டம்: 16-பேர் மீது வழக்கு பதிவு.!!

பிரதமர் படத்திற்கு மலர் தூவி போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 16-பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கோவை: பிரதமர் படத்திற்கு மலர் தூவி போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 16-பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து பெட்ரோல் பங்க் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பிரதமர் படத்திற்கு மலர் தூவி தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் 30-க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தனர். மேலும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கொரோனா ஏற்படும் வகையில் போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிட கழக அமைப்பின் பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் உட்பட 16-பேர் மீது ரேஸ்கோர்ஸ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதேபோல், கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே விதிமுறையை மீறி தீபாவளி போனஸ் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு மாவட்ட செயலாளர் பத்மநாபன் உட்பட 14-பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...