கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: கனகராஜ் சகோதரர் தனபாலுக்கு 5-நாள் போலீஸ் காவல்.!!

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், காவல்துறை காவலில் வைத்து விசாரிக்க 5-நாட்கள் அனுமதி அளித்து மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார்.



கோவை: நீலகிரி உதகை கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீலகிரி உதகை கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட தனபால் மற்றும் ரமேஷ் இவர்கள் இருவர் மீதும் 201,211,404. பிரிவுகளின் கீழ் சாட்சிகளை மறைத்தல், சாட்சிகளை அழித்தல், சாட்சி சொல்ல விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தனிப்படை காவல்துறை சேலத்தில் வைத்து கைது செய்தனர்.

அதன்பிறகு இவர்களைக் கூடலூர் சிறையில் அடைத்த நிலையில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரித்து வரும் கோத்தகிரி ஆய்வாளர் வேல்முருகன் உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இருவரையும் தங்களது சிறைக்காவலில் எடுத்து விசாரிக்க நேற்று முன்தினம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று கனகராஜின் சகோதரர் தனபால் தற்போது உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் பாபா கனகராஜின் சகோதரர் தனபாலை காவல்துறை காவலில் வைத்து விசாரிக்க 5 -நாட்கள் அனுமதி அளித்து மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...