விமான பயணியிடம் ரூ. 53 லட்சம் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய்- வருமான வரித்துறையினர் விசாரணை


டெல்லியில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த கென்ய இளைஞரிடமிருந்து 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்து வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



இன்று காலை டெல்லியில் இருந்து கோவை வந்த இண்டிகோ விமானத்தில் கணக்கில் வராத புதிய ரூபாய் நோட்டுக்கள் கொண்டு வரப்படுவதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமானத்தில் வந்த பயணிகளை சோதனையிட்ட போது கென்யா நாட்டை சேர்ந்த கொகுகோ சிஜியோகி சுவெல்டா என்ற பயணியிடம் கட்டுக்கட்டாக இந்திய ரூபாய் நோட்டுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உரிய பதிலளிக்காததால் அவரை வருமான வரித்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சுவெல்டாவிடம் இருந்து 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களையும் 4 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்களையும் பறிமுதல் செய்துள்ள வருமானத்த்துறையினர் இந்த பணம் எவ்வாறு பரிமாற்றம் செய்யப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...