2021-2022 ம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகைக்குக் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 20-சதவீத போனஸ் வழங்க வேண்டும் என கோவை மண்டல பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளருக்குக் தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
கோவை: 2021-2022 ம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகைக்குக் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்க வேண்டும் என கோவை மண்டல பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளருக்குக் தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
கோவை மாவட்டம் கட்டுமான அமைப்பு சாரா அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தொழிற்சங்க தலைவர்கள் ஜி.முருகேசன் (அண்ணா கட்டுமானம்), ஜி.மனோகரன் (எச்.எம்.எஸ்), கிருஷ்ணசாமி (எல்.பி.எப்) செல்வராஜ் (ஏ.ஐ.டி.யு.சி), சிரஞ்சீவி கண்ணன் (ஐ.என்.டி.யு.சி), கே.மனோகரன் (சி.ஐ.டி.யு), முருகேசன் (பி.எம்.எஸ்), ஆகிய கோவை மண்டல பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளருக்குக் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
2021-2022 ம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகைக்குக் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டு வலியுறுத்தியுள்ளார்.