முன்னாள் தி.மு.க அமைச்சர் தன்னிடமிருந்து லஞ்சம் பெற்றது தொடர்பாக கேரள குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருவதாக சரிதாநாயர் தகவல்


முன்னாள் தி.மு.க அமைச்சர் பழனிமாணிக்கம் தன்னிடமிருந்து 25 லட்சரூபாய் லஞ்சமாக பெற்ற விவகாரம் தொடர்பாக கேரள குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக கோவையில் சரிதாநாயர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கோவை வடவள்ளி பகுதியில் காற்றாலை அமைத்து தரும் நிறுவனம் நடத்தி அதன் மூலமாக சரிதாநாயர் அவரது முன்னாள் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் மற்றும் ரவி ஆகியோர் காற்றாலை அமைத்து தருவதாக கூறி ரூபாய் 28 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் 2009-ஆம் ஆண்டு மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கின் விசாரணை கோவை ஆறாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு விசாரணைக்காக கோவை நீதிமன்றத்தில் இன்று சரிதா நாயர் ஆஜரானார். அப்போது, இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 10-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார். 

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரிதாநாயர், முன்னாள் தி.மு.க அமைச்சர் பழனி மாணிக்கம் தன்னிடம் 25 லட்ச ரூபாய் லஞ்சமாக பெற்ற விவகாரம் குறித்து தற்போது கேரள குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், கேரள சோலார் பேனல் மோசடி வழக்கில் லஞ்சம் பெற்ற உமன்சாண்டி உள்ளிட்ட சில கேரள அமைச்சர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் எனவும் சரிதாநாயர் அப்போது தெரிவித்தார்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...