சொக்கனூரில் கணினி சிட்டா திருத்த சிறப்பு முகாம்: மனுக்களுக்கு உடனடி தீர்வு.!!

கிணத்துக்கடவு அருகே சொக்கனூரில் கணினி சிட்டா திருத்தச் சிறப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு உத்தரவு ஆணை வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைப்படி கணினி சிட்டா திருத்தச் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு தாலுகா பகுதிக்கு உட்பட்ட சொக்கனூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது.



துணை ஆட்சியர் குணசேகரன் தலைமையில், நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் விவசாயிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டு கணினி சிட்டாவில் உள்ள திருத்தங்கள், பட்டா பெயர் மாற்றம் நத்தம் பட்டா மாறுதல், போன்ற மனுக்கள் அளித்தனர்.

மனுக்களைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் ஆவணங்களைச் சரி பார்த்து உடனடியாக தீர்வு காணப்பட்டு உத்தரவு ஆணை வழங்கப்பட்டது.

இதில், கிணத்துக்கடவு வட்டாட்சியர் சசிரேகா, மண்டல துணை வட்டாட்சியர் ராமராஜ், தேர்தல் துணை வட்டாட்சியர் வேல்முருகன், வட்ட துணை ஆய்வாளர் தமிழ்ச்செல்வன், வருவாய் ஆய்வாளர் லலிதா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...