திருப்பூர் மேட்டுப்பாளையம் பி.என்.ரோட்டில் உள்ள சாலை ஒன்றில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அதிர வைக்கும் இந்த சம்பவத்தின்போது நல்வாய்ப்பாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.
ஈரோடு: திருப்பூர் மேட்டுப்பாளையம் பி.என்.ரோட்டில் உள்ள சாலை ஒன்றில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அதிர வைக்கும் இந்த சம்பவத்தின்போது நல்வாய்ப்பாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.
ஈரோடு மாவட்டம் நம்பியூரை சேர்ந்தவர் குமார் (வயது 37). இவர் இன்று காலை திருப்பூர் மேட்டுப்பாளையம் பி.என்.ரோட்டில் உள்ள பனியன்நிறுவனத்தில் துணிகளைத் தைக்க ஆர்டர் கொடுத்து விட்டு காரில் நம்பியூருக்கு புறப்பட்டார்.
திருப்பூர் கூத்தம்பாளையம் பிரிவு அருகே செல்லும் போது போது திடீரென காரில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சியடைந்த குமார் சாலையோரம் நிறுத்தி விட்டு காரில் இருந்து இறங்கித் தப்பினார். பின்னர் சிறிது நேரத்தில் கார் மளமளவெனத் தீப்பிடித்து எரிந்தது. காரில் சிலிண்டர் பொருத்தப்பட்டிருந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர்.
மேலும் இது குறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றிய தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. காரில் தீப்பிடித்தது எப்படி என்று தெரியவில்லை. இது குறித்து திருமுருகன் பூண்டி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.