கிணத்துக்கடவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக ஆலோசனை கூட்டம் - மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி பங்கேற்பு!

கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் முகமது யாசின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நகர பொறுப்பாளர் கனகராஜ் முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.


கோவை: கிணத்துக்கடவில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த திமுகவினர் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி பங்கேற்றார்.

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தயாராகி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவில் ஒன்றியம் மற்றும் நகர திமுக சார்பில் நகரப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம் செக்போஸ்ட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் முகமது யாசின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நகர பொறுப்பாளர் கனகராஜ் முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி பேசியதாவது:-



நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையாக திமுக வெற்றி பெற்றிருப்பது தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் செய்த திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்றும், இதேபோல் நடைபெற இருக்கிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை மக்களிடையே கொண்டு சென்று ஒற்றுமையுடன் செயலாற்றி நகரப்புற தேர்தலில் திமுக வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் கதிர்வேல், மார்க்கெட் சின்னு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜன், கிணத்துக்கடவு ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி, தலைமை கழக பேச்சாளர் தமிழ்பித்தன், மகளிர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சக்தி சரண்யா உட்பட நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...