தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெயராமன் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை வடவள்ளி பகுதியில் முதியவர் வங்கி கணக்கில் இருந்து பணம் மோசடி செய்த வழக்கில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடவள்ளி அடுத்த சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராவணன் நாயுடு என்பவரின் மகன் ஜெயராமன் (69). ஓய்வுபெற்ற இவர் தனது வங்கி கணக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வைத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயராமனுக்கு செல்போன் மூலம் அழைப்பு ஒன்று வந்துள்ளது. வங்கியின் மொபைல் போன் ஆப் முடக்கப்பட்டுள்ளது என்றும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்பட்டு உள்ள லிங்கில் உங்களைப் பற்றிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதை நம்பிய ஜெயராமன் எஸ்எம்எஸ் மூலம் வந்த லிங்கில் தனது விபரங்களைப் பதிவு செய்தார். சிறிது நேரத்திலேயே அவரது வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 20 ரூபாய் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்ட இருந்ததாக மெசேஜ் வந்தது.
இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெயராமன் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.