அமெரிக்காவில் நடைபெறும் ஓவிய கண்காட்சியில் தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கைகளின் புகைப்படங்கள் தேர்வு.!!

அமெரிக்காவில் நடைபெறும் ஓவிய கண்காட்சியில் தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கைகளின் புகைப்படங்கள் தேர்வாகி உள்ளதாகவும், இதில் பங்கு பெற தமிழக அரசு நிதி உதவி அளிக்கவும், கலை கூடம் அமைக்கவும் திருநங்கை கல்கி சுப்பிரமணியம் கோரிக்கை.



கோவை: திருநங்கை என்பதால் கலை கூடம் அமைக்க வீடு வாடகைக்குத் தர தயங்குவதாகவும் கூறியுள்ளனர். கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் சகோதரி பவுண்டேஷன் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் திருநங்கை கல்கி சுப்ரமணியம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-



2017-ம் ஆண்டு முதல் திருநங்கைகளின் கலை, திறமைகளை வெளிக்கொண்டு வர நிகழ்வுகள் நடத்தி வருவதாகவும், திருநங்கைகளிடம் இயற்கையாகவே கலை, படைப்பாற்றல் இருக்கின்றது என தெரிவித்த அவர், திருநங்கைகளின் ஆயிரக்கணக்கான படைப்புகள் காட்சி படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பல்கலைக் கழகம் திருநங்கைகளின் ஓவியங்களைக் கண்காட்சியில் வைக்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருநங்கைகளின் ஓவியங்களைத் தேர்வு செய்து இருப்பதாகவும், தமிழகத்திலிருந்து 7-திருநங்கைகள் கேரளாவிலிருந்து ஒரு திருநம்பி ஆகிய 8-பேரின் ஓவியங்கள் இந்த கண்காட்சிக்குத் தேர்வாகி இருப்பதாகவும், திருநங்கைகள் அங்கீகாரத்திற்குப் போராடி வரும் நிலையில், அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பல்கலை கழகத்தில் திருநங்கைகளின் ஓவியத்திற்கு அங்கீகாரம் கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.



வரும் நவம்பர் முதல் அடுத்தாண்டு ஏப்ரல் 20-ம் தேதி வரை தெற்கு புளோரிடா பல்கலை கழகத்திலும், இணைய தளத்திலும் இந்த ஓவியங்கள் இடம் பெற இருப்பதாகவும், ஒரு வாரத்தில் புகைப்படங்களை அங்கு அனுப்ப இருப்பதாகவும் தெரிவித்தார்.

திருநங்கைகளின் கலை படைப்பாற்றலை மத்திய மாநில அரசுகள் கவனித்து ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், இதற்கு இந்திய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் எனவும், தமிழக அரசும் நிதி உதவி அளிக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும், பொள்ளாச்சியில் இருக்கும் திருநங்கைகளுக்குக் கலைக்கூடம் அமைக்க இடம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் எனவும், திருநங்கைகளுடன் திருநம்பிகளையும் அரவணைக்கத் துவங்கி இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு திறமைகள் வளர்க்கத் தேவையான ஊக்கம் அளிக்க வேண்டும் எனவும், பொள்ளாச்சியில் தென்னை தொடர்பான அழகு சாதனங்கள் உருவாக்கும் பயிற்சியினை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருநங்கை கல்கி சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்தார்.



45-நாடுகள் சேர்ந்த திருநங்கைகளின் ஓவியங்கள் அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பல்கலையில் கண்காட்சிக்கு வைக்கப்பட இருப்பதாகவும் கல்கி சுப்பிரமணியம் தெரிவித்தார்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...