கோவையில் கரடியிடம் போராடி தனது எஜமானரின் உயிரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்..!

கரடியிடம் சிக்கிக் கொண்ட ராமராஜன் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள கூச்சலிட்ட போது சத்தம் கேட்டு ஓடி வந்த பப்பி, தனது எஜமானரை காப்பாற்றியது.


கோவை: கோவையில் மூர்க்கமாக தாக்கிய கரடியிடம் போராடி தனது எஜமானரின் உயிரை வளர்ப்பு நாய் ஒன்று காப்பாற்றியுள்ளது.

மேட்டுப்பாளையம் அடுத்த குஞ்சப்பனை என்னும் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமராஜ், மனைவி மற்றும் பெற்றோருடன் தனது தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பப்பி என்ற நாட்டு நாயொன்றை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், ராமராஜன் விவசாய பணியை மேற்கொண்டிருந்த போது, வனப் பகுதியில் இருந்து வந்த கரடியொன்று அவரை தாக்க துவங்கியது. இதில் தடுமாறி கீழே விழுந்த ராமராஜனை மூர்க்கத்தனமாக நகத்தால் கீறியபடி கழுத்துப் பகுதியை கடித்து குதற முயன்றது.

கரடியிடம் வசமாக சிக்கிக் கொண்ட ராமராஜன் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள போராடினார். அப்போது, சத்தம் கேட்டு ஓடி வந்த பப்பி, தனது எஜமானரை காப்பாற்றும் நோக்கில் கரடிக்கு மிக அருகில் சென்று விடாமல் குரைக்க துவங்கியதோடு ஒரு கட்டத்தில் கரடியை கோபத்துடன் கடிக்க துவங்கியது.

நாயின் இச்செயலால் அச்சமடைந்த கரடி, வேறு வழியின்றி ராமராஜனை விட்டு விட்டு காட்டுக்குள் ஓடி மறைந்தது.



இதற்குள் நாயின் தொடர் சத்தத்தை கேட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் அருகில் உள்ள தோட்டத்தினர் விரைந்து வந்து காயமடைத்த ராமராஜனை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

கரடி கடித்ததில் காயமடைந்த ராமராஜனுக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

இந்த நிலையில், பப்பி இல்லை என்றால் ராமராஜன் இறந்திருப்பார் என அவரது குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...