கோவையில் வரி வசூலில் 16 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வணிக வரி வசூல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு..!

கடந்த 30.6.2005 முதல் 2.8.2007ம் ஆண்டு வரை வசூலித்த தொகையை அலுவலகத்தில் செலுத்தாமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.



கோவை: கோவை மாவட்டத்தில் வரி வசூலில் 16 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வணிக வரி வசூல் ஆய்வாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பாலசுந்தரம் ரோட்டில், உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் வரிவசூல் ஆய்வாளராகப் பணியாற்றியவர் செந்தில்குமார் (56). பொள்ளாச்சி சேரன் நகரைச் சேர்ந்த இவரிடம் கோவை கணபதி பகுதியில் வணிக வரி வசூலிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.

கடந்த 30.6.2005 முதல் 2.8.2007ம் ஆண்டு வரை வசூலித்த தொகையை இவர் அலுவலகத்தில் செலுத்தாமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. மொத்தம் ரூபாய் 16 லட்சத்து 15 ஆயிரத்தை செலுத்தாமல் செந்தில்குமார் மோசடி செய்தது அலுவலக ஆய்வில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், செந்தில்குமார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு வணிகவரி துறை உதவி ஆணையாளர் பிரபு கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார்.

இதன் பெயரில் செந்தில்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...