கோவையில் போலீஸ் குடியிருப்பில் புகுந்த மர்ம நபர்கள் 2-போலீசார் வீடுகளில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் போலீஸ் குடியிருப்பில் புகுந்த மர்ம நபர்கள் 2-போலீசார் வீடுகளில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் போலீஸ் குடியிருப்பில் கொள்ளையர்கள் புகுந்து 2-போலீசார் வீடுகளில் நகை பணம் கொள்ளை அடித்துச் சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நகீனா. இவர் கோவை மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவருக்குக் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள R 3-ப்ளாக்கில் குடியிருந்து வருகிறார்.
இவர் கடந்த 22-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு சொந்த ஊரான கிருஷ்ணகிரிக்குச் சென்றார். இன்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டுத் திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அறையிலிருந்த பீரோ திறந்து கிடந்தது.
அதிலிருந்த ஒரு பவுன் தங்க மோதிரம், ஒரு லேப்டாப் ஆகியவற்றைக் காணவில்லை. மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து நகீனா ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
இதே போல அதே போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் மணிகண்டன் இவர் நக்சலைட் தடுப்பு பிரிவு போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு அத்திக்கடவு முகாமில் உள்ள பயிற்சி மையத்திற்குப் பயிற்சிக்குச் சென்றுவிட்டார்.
பணி முடிந்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த 1.5-பவுன் தங்கச்செயின், 4-கிராம் மோதிரம், 2-பவுன் தங்க நகை, வெள்ளிப் பொருட்கள் ரொக்கம் ரூபாய் 4000-ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து, மணிகண்டன் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள குடியிருப்பில் சமீபத்தில் நடந்த மூன்றாவது கொள்ளைச் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு மிகுந்த போலீஸ் குடியிருப்பில் நடைபெற்ற இந்த சம்பவம் போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.