சசிகலாவை வரவேற்பதும், வரவேற்காததும் அதிமுகவின் முடிவு- பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்.!!

சசிகலாவை வரவேற்பதும், வரவேற்காததும் அதிமுகவின் முடிவு எனவும், அதில் பாஜகவிற்கு எந்த பங்கும் இல்லை என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்தெரிவித்தார்.


கோவை: சசிகலாவை வரவேற்பதும், வரவேற்காததும் அதிமுகவின் முடிவு எனவும், அதில் பாஜகவிற்கு எந்த பங்கும் இல்லை என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்தெரிவித்தார்.

மக்களின கோரிக்கைகளைத் தெரிவிக்க வாட்சப் மூலம் தொடர்பு கொள்ள 72003-31442 இந்த எண்ணைப் பயன்படுத்தலாம் எனவும், கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட இடையர் வீதி பகுதியில் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் அவர் கூறியதாவது:-

நமக்காக நம்ம எம்.எல்.ஏ என்ற நிகழ்ச்சியில், ஒரு பகுதியாகக் கோவை தெற்குத் தொகுதி மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிப்பதுடன் குறைகளைக் கேட்கின்றேன். கோவை மாநகராட்சி பகுதியில் குப்பைகள் தேங்கி இருக்கின்றது.

மோசமான சாலைகளால் விபத்துகள் ஏற்படுகின்றது. சாக்கடை கால்வாய்களைத் தூர்வார வேண்டும். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்று இருக்கிறோம்.

தமிழக அரசிடம் சட்டமன்றத்தில் முன்வைத்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டு ஒரு சில பணிகள் துவங்கி இருக்கிறது. அதற்காகத் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். பா.ஜ.க சார்பில் கேரளாவிற்கு நிவாரண உதவிகள் அனுப்பப்பட்டுள்ளது.

சசிகலாவை வரவேற்பதும், வரவேற்காததும் அதிமுகவின் முடிவு. அதில் பாஜகவிற்கு எந்த பங்கும் இல்லை. ஆளுநர் மாநில அரசிடம் திட்டங்களைத் தெரிந்து கொள்வதற்காகக் கோரிக்கை வைத்திருக்கிறார்.

தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளக் கேட்டு இருக்கிறார்கள். இதில் எந்த தவறுமில்லை. உரிமை மீறல்கள் இல்லை. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதும் கிடையாது. இது வழக்கமாக நடப்பது தான் எனப் பேட்டியளித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...