கோவை கிணத்துக்கடவில் நடைபெற்ற தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர் கூட்டம் - தேசிய செயலாளர் ஶ்ரீவல்ல பிரசாத் பங்கேற்பு..!

மேலும், நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கமிட்டிகள் அமைத்து வருகிற நகரப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


கோவை: கோவை கிணத்துக்கடவில் நடைபெற்ற தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர் கூட்டத்தில் தேசிய செயலாளர் ஶ்ரீவல்ல பிரசாத் பங்கேற்றார்.

கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயல்வீரர்கள் கூட்டம் கிணத்துக்கடவு செக்போஸ்ட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.



தெற்கு மாவட்ட தலைவர் பகவதி தலைமையில், நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் வித்யாசாகர் வரவேற்றுப் பேசினார்.



செயல்வீரர்கள் கூட்டத்திற்கு கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செயல்வீரர்கள் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கமிட்டி செயலாளர் ஸ்ரீ வல்ல பிரசாத் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கமிட்டிகள் அமைத்து வருகிற நகரப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயலாளர் சித்திக், மாநில துணைத்தலைவர் அழகு ஜெயபாலன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கவிதா, கிணத்துக்கடவு நகர தலைவர் செந்தில்குமார், வட்டார தலைவர் சிவராஜ், மாவட்ட துணைத் தலைவர் லட்சுமணன், நகர துணைத் தலைவர் ஜெகதீஷ், நகர செயலாளர் தம்புராஜ், தேவலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...