திருப்பூரில் கொரோனா தாக்கி உயிரிழந்த மருத்துவருக்குக் கண்ணீர் மல்க அஞ்சலி..!

உடன் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.


திருப்பூர்: கொரோனா தாக்கி உயிரிழந்த மருத்துவருக்கு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

திருப்பூர் புதுராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள நகர்புற சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்த டாக்டர் அருள்ராஜ் கடந்த மாதம் 26ம் தேதி உடல்நலக் குறைவால் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளித்த நிலையில், அவரின் உடல்நலம் மோசமடைந்ததை அடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.

இதனையடுத்து, அவரது உடல் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மருத்துவர் அருள்ராஜ் பணியாற்றி வந்த புதுராமகிருஷ்ணபுரம் மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.



இந்த நிகழ்வில், திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் கலந்து கொண்டு மருத்துவருக்கு அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்தும் போது உடன் பணியாற்றிய செவிலியர்கள் கண்ணீர் சிந்தியபடியிருந்தது, மருத்துவர் அருள்ராஜின் அர்ப்பணிப்பான மருத்துவ சேவையை அனைவருக்கும் உணர்த்துவதாக அமைந்தது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...