8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பழைய பஸ் பாசை பயன்படுத்தி, பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்துக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை: வருகிற நவம்பர் 1ஆம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாததால் புதிய பஸ் பாஸ் எடுக்கவில்லை.
இந்த நிலையில், 'எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பழைய பஸ் பாசை பயன்படுத்தி, பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்' என போக்குவரத்துக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏற்கனவே நேரடி வகுப்புகள் துவங்கி நடந்து வருகின்றன. வரும் 1ம் தேதி முதல், 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும், நேரடி வகுப்புகளைத் துவக்க தமிழக பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதிய பஸ் பாஸ் வழங்கப்படாததால், பழைய பஸ் பாஸ், பள்ளி அடையாள அட்டை, சீருடையைப் பார்த்து, மாணவர்களை இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கும்படி, ஓட்டுனர், நடத்துநர்களுக்குப் போக்குவரத்துக் கழக தலைமை உத்தரவிட்டுள்ளது.