கோவை மாநகராட்சி சார்பாக சமூக வலைதளத்தில் முனிசபல் பிரீமியர் லீக் துவக்கம். மக்கள் அமோக வரவேற்பு.

கோவை மாநகராட்சியின் சமூக வலைதளத்தில், மாநகராட்சி சார்பாக விதிக்கப்படும் வரிகள் தொடர்பான வினா- விடை போட்டி போல் கேள்விகள் கேட்கப்படும். போட்டியில் பங்குபெறும் மக்கள் சரியான பதிலை தேர்தெடுத்து தெரிவிக்கலாம்.


கோவை: கோவை மாநகராட்சி சார்பாக சமூக வலைதளத்தில் முனிசபல் பிரீமியர் லீக் துவங்கப்பட்டுள்ளது

கோவை மாநகராட்சி சார்பாக அதன் திட்டங்கள் குறித்தும் கொரோனா, டெங்கு உள்ளிட்ட தொற்றுகள் குறித்தும் சமூக வலைதளங்களில் மீம்ஸ் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு, கோவை மாநகர மக்கள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். பிரபலமான சினிமா காட்சிகள், வசனங்கள் மூலம் மீம்ஸ் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதால், மாணவ மாணவியர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இதனிடையே, கோவை மாநகராட்சி சார்பாக தற்போது சமூக வலைதளத்தில் முனிசபல் பிரீமியர் லீக் துவக்கப்பட்டுள்ளது. இதில், கோவை மாநகராட்சியின் அதிகாரபூர்வ சமூக வலைதளத்தில்,மாநகராட்சி சார்பாக விதிக்கப்படும் வரிகள் தொடர்பான வினா- விடை போட்டி போல் கேள்விகள் கேட்கப்படும். அதற்கான, பல பதில்களும் கொடுக்கப்பட்டிருக்கும். அதில், சரியான பதிலை, போட்டியில் பங்குபெறும் மக்கள் தேர்தெடுத்து தெரிவிக்கலாம்.

முதல்கட்டமாக, மாநகராட்சி சார்பாக சொத்துவரி தொடர்பான விழிப்புணர்வு கேள்வி கேட்கப்பட்டு மக்களிடம் பதில்கள் பெறப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மக்களுக்கு விதிக்கப்படும் வரிகள் குறித்துவிழிப்புணர்வு கிடைக்கும். கோவை மாநகராட்சியின் இந்த புதிய முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...