கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மழை நீர் ஒழுகுவதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
கோவை: கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மழை நீர் ஒழுகுவதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
கோவை மாவட்டம் புறநகர் பகுதிகளில் இன்று மாலை மிதமான மழை பெய்தது.

இந்நிலையில் கருமத்தம்பட்டி பகுதியிலிருந்து அன்னூருக்குச் சென்ற புறநகர் (A11)பேருந்தின் உட்பகுதியில் மழைநீர் உள்ளே வடிந்தது.
இதனால் பேருந்தில் அமர முடியாமல் நின்றபடி பயணம் மேற்கொண்டனர். கடந்த ஒரு மாத காலமாகத் தொடர் மழை பெய்து வரும் நிலையில் புறநகர் பகுதியில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் மழையில் நனைந்தபடியே பயணிப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
மழைக்காலங்களில் பொது மக்கள் நனையாமல் பயணிக்கும் அளவிற்குப் பேருந்துகளை ரிப்பேர் செய்து இயக்கிடப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேருந்து பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.