சுய தொழில் தொடங்க கடன் மற்றும் இலவச பட்டா கேட்டு பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கோரிக்கை மனு அளித்தனர்.
பொள்ளாச்சி: சுய தொழில் தொடங்க கடன் மற்றும் இலவச பட்டா கேட்டு பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கோரிக்கை மனு அளித்தனர்.
பொள்ளாச்சி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்கள் பேருந்து நிலையங்கள், வணிக வளாக கடைகளில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு தங்களில் வாழ்வாதாரத்தைப் பெற்று வருகின்றனர்.
ஒரு சிலர் மட்டும் சமையல் வேலை போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமூகத்தில் திருநங்கைகளின் வாழ்வாதாரம் மேம்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
பெரும்பாலான திருநங்கைகள் பாலியல் தொழில் மற்றும் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலை மாறவேண்டும் என்று சுய தொழில் தொடங்குவதற்காக வங்கிகளில் கடன் கேட்டால் அதிகாரிகள் தர மறுப்பதாகவும் எனவே தங்களுக்கு உணவகங்கள், சாலையோர தள்ளுவண்டிக் கடைகள், போன்ற சிறு தொழில் செய்வதற்குக் கடனுதவி வழங்க வேண்டும்.

அதேபோல் பல ஆண்டுகளாக வீட்டுமனைப்பட்டா வழங்கிய திருநங்கைகளுக்கு வீடு கட்டித்தர வேண்டும். மேலும் 60-வயதைக் கடந்த திருநங்கைகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கத் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.