கோவையில் ரயில்களில் பட்டாசு கொண்டு செல்ல தடை - போலீசார் தீவிர கண்காணிப்பு..!

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், தனிப்படை அமைத்து பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டு வருகின்றனர்.


கோவை: ரயில்களில் வெளியூர்களுக்கு பட்டாசுகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கோவை ரயில்வே நிலையத்தில் ரயில்வே போலீசார் தொடர்ந்து பயணிகளிடம் பரிசோதனை மற்றும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு கொண்டு செல்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்ல ரயில்வே போலீசார் தடை விதித்துள்ளனர். தீபாவளி நெருங்கி வருகிறது. பட்டாசுக்கடைகளில் இன்னும் சில நாட்களில் விற்பனை துவங்கி விடும். ரயில்களில் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், தனிப்படை அமைத்து பயணிகளின் உடைமைகளை சோதனையிட துவங்கியுள்ளனர். தடையை மீறி ரயில்களில் பட்டாசுகளை கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...