கோவையில் தொடர் கதையாகி வரும் கொள்ளை சம்பவங்கள்..!! ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் வீட்டில் 50 பவுன் நகை, ரூ 2 லட்சம் திருட்டு..!

கொள்ளை சம்பவங்களை தடுக்க பொதுமக்கள் வெளியூர் செல்லும் போது காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் வீட்டில் 50 பவுன் நகை, ரூ 2 லட்சம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை துடியலூரை அடுத்த வடமதுரை கண்ணன் நகரை சேர்ந்த கரிகாலன்(60) ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர். இவரது மனைவி ராணி, மகன் மகளுடன் சேலத்தில் நடைபெற்ற உறவினர் திருமண விழாவிற்கு கடந்த 23ம் தேதி சென்று விட்டு நேற்று இரவு 11 மணிக்கு வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் வைத்து இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ 2 லட்சம் பணம் திருட்டுப் போனது தெரியவந்தது.

பின்னர், இது குறித்து துடியலூர் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி ராஜபாண்டியன், இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

கடந்த 2 நாட்கள் முன்பு ஜி.என் பகுதியில் ஐஸ் கிரீம் டீலர் சீனிவாசன் என்பவர் வீட்டில் 1 கோடி மதிப்பில் வைர நகைகள் 50 பவுண் நகை திருட்டு போனது. மேலும், நேற்று முன்தினம் வெள்ளக்கிணறு பகுதியில் தினேஷ்குமார் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு போனது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தினமும் தொடரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் கூறும் போது, பொதுமக்கள் வெளியூர் செல்லும் போது காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும், தங்க நகைகளை வீட்டில் வைத்து செல்லக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...