பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவலர்கள் மது பாட்டில்களை வாங்கி வைத்துக் கொண்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் மனு அளிக்க அனுமதித்தனர்.
கோவை: தீபாவளி நாளன்று டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தியும், பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டாம் என்று கூறி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் காலி மதுபாட்டில்களுடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் அளித்த மனுவில், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நாளன்றும் மது கடைகள் இயங்குவதால் பலரும் மது அருந்திவிட்டு போதையில் பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், அந்நாளில் மதுவிற்காக அதிக பணத்தை செலவிடுவதாகவும், எனவே தமிழக முதல்வர் தீபாவளி நாளன்று டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்றும் அந்நாளில் பட்டாசுகள் வெடிப்பதற்கு எவ்வித கட்டுபாடுகளையும் விதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தனர்.
இதனையடுத்து, மது பாட்டில்களை வாங்கி வைத்துக் கொண்ட காவலர்கள், அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் மனு அளிக்க அனுமதித்தனர்.