கோவையில் திமுக 100-நாள் சாதனை துண்டு பிரசுரம் வினியோகம்.!!

கிணத்துக்கடவில் திமுக கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிற்சங்கம் சார்பில் திமுக ஆட்சியின் 100-நாள் சாதனை அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி வருகின்றனர்.


கோவை :கிணத்துக்கடவு திமுக கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிற்சங்கம் சார்பில் திமுக ஆட்சியின் 100-நாள் சாதனை அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி வருகின்றனர்.

தமிழகத்தில் அதிக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி தொடங்கி 100- நாட்களில் பல்வேறு மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. திமுக ஆட்சியின் 100- நாள் சாதனையை திமுகவினர் மக்களிடையே தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு திமுக கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் கதிர்வேல் தலைமையில் திமுக ஆட்சி 100-நாள் சாதனை அடங்கிய துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கி வருகின்றனர்.



இன்று கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பெரியார் நகர், எஸ்.எம்.பி.நகர் பகுதியில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தினர் வீடு வீடாக சென்று திமுக அரசின் 100-நாள் சாதனை அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளருக்கு வாக்கு அளித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இனிப்புகள் வழங்கினர்.

மேலும் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்து அதிலுள்ள பயன்களை பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டனர். இதில், தலைமை கழக பேச்சாளர் தமிழ்பித்தன், கணேஷ், மணிகண்டன், ஈஸ்வரன், லட்சுமணன், மிசா சிவசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...