கோவையில் பெண் அதிகாரிக்கு பாலியல் வன்கொடுமை: விமானப்படை அதிகாரியிடம் விசாரணை நடத்த அனுமதி.!!

இந்திய விமானப்படை கல்லூரியில் பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவரை தங்களிடம் ஒப்படைக்க போலீசார் மனு தாக்கல் செய்த நிலையில் விமானப்படை அனுமதியுடன் விசாரித்துக்கொள்ள நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


கோவை: இந்திய விமானப்படை கல்லூரியில் பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவரை தங்களிடம் ஒப்படைக்க போலீசார் மனு தாக்கல் செய்த நிலையில் விமானப்படை அனுமதியுடன் விசாரித்துக்கொள்ள நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கோவை சுங்கம் பகுதியில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி கல்லூரியில் கடந்த மாதம் பெண் அதிகாரி ஒருவர் சக அதிகாரி அமிதேஷ் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி தொடர்ந்த வழக்கு கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அதில் கைது செய்யப்பட்ட அமிதேஷை விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும்படி உத்தரவு வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி கைதான அமித்தேஷை தங்களிடம் ஒப்படைக்கும்படி கோவை காவல்துறையினர் கோவை மாவட்ட முதன்மை நீதிபதி நாகராஜிடம் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணையை 21-ம் தேதி நடைபெறும் என நீதிபதி கூறியதை அடுத்து 23-ம் தேதி மனு மீதான தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டு ஒத்தி வைத்தார். இதனையடுத்து இன்று விமானப்படை அதிகாரிகள் அனுமதியுடன் அமித்தேஷை விசாரித்துக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...