ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் சர்வதேச அறிவியல் திருவிழாவில் முதல் பரிசு வென்றனர்


தில்லியில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் திருவிழாவில் ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளனர். 

ஸ்வச்பாரத் மற்றும் ஸ்டேடர்ஜிக் அப்லிகேசன் ஆகிய இரு பிரிவுகளில் நடைபெற்ற அறிவியல் போட்டிகளில் இப்பரிசினை ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் பெற்றுள்ளனர்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் விஞ்ஞான்பாரதி ஆகியவை இணைந்து இப்போட்டிகளை நடத்தியது. இதில் 3000 இளம் விஞ்ஞானிகள், 300 கல்வி சார் துறையினர், 200 தொழில் துறையினர் என பலர் பங்கேற்றனர்.

மாணவர்கள், ஸ்வச் பாரத், பசுமை ஆற்றல், டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் தங்களது ஆய்வறிக்கைகளை வெளியிட்டனர். இதில் மொத்தமாக மாணவர்களிடம் இருந்து 1300 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டது.

இதில், ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த இஐஇ, இசிஎஸ், இஇஇ, சிஎஸ்இ ஆகிய பாடப்பிரிவுகளில் பயிலும் ஆர்.நித்திஷா, ஆர்.பி.ஸ்ரீநாத், கோகுல்சண்முகம், என்.ராம்விக்ணேஷ், இ.விக்ணேஷ் மற்றும் ஏ.மணிகண்டன் ஆகிய மாணவர்கள் முதல் பரிசுகளை பெற்றனர்.

வெற்றிபெற்றோர்க்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, புவி அறிவியல் அமைச்சர் ஹர்ஸ்வர்தா பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...