பொள்ளாச்சி தாலுகாவில் எரிபட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தவல்லி என்பவர், தன் நிலத்துக்குச் செல்லும் வழியில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் உடல்களை தகனம் செய்ய தடை விதிக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் பதில்.
கோவை: உடல்களை தகனம் செய்வதை தடுப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள எரிபட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தவள்ளி என்பவர், தனது கணவருக்குச் சொந்தமான நிலத்துக்குச் செல்லும் வழியில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் உடல்களை தகனம் செய்வதாகவும், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்தநீதிபதி தெரிவித்ததாவது: மரணத்திற்கு பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை. உடல்களை தகனம் செய்வதை தடுப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற நடைமுறைகள் கட்டுப்படுத்தப்படும். மயானம் என அறிவித்த பகுதியில் அனைத்து தரப்பினரின் உடல்களையும் தகனம் செய்ய அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கு தமிழக அரசு சார்பில், ‛‛கிராம மக்களுக்கு மயானத்துக்கு நிலம்
ஒதுக்கியுள்ள போதிலும், குறிப்பிட்ட சமுதாயத்தினர், அதைப் பயன்படுத்த அனுமதிக்காததால் சாலை ஓரங்களில் உடல்களை எரிக்கும் நடைமுறையை பின்பற்றுகின்றனர். அனைத்துத் தரப்பினரும் மயானத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அரசுத்துறை அதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது", என்று விளக்கம் அளிக்கப்பட்டது.