மரணத்திற்கு பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை..! உடல்களை தகனம் செய்வதை தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் -  சென்னை உயர்நீதிமன்றம்

பொள்ளாச்சி தாலுகாவில் எரிபட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தவல்லி என்பவர், தன் நிலத்துக்குச் செல்லும் வழியில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் உடல்களை தகனம் செய்ய தடை விதிக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் பதில்.

கோவை: உடல்களை தகனம் செய்வதை தடுப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள எரிபட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தவள்ளி என்பவர், தனது கணவருக்குச் சொந்தமான நிலத்துக்குச் செல்லும் வழியில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் உடல்களை தகனம் செய்வதாகவும், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்தநீதிபதி தெரிவித்ததாவது: மரணத்திற்கு பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை. உடல்களை தகனம் செய்வதை தடுப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற நடைமுறைகள் கட்டுப்படுத்தப்படும். மயானம் என அறிவித்த பகுதியில் அனைத்து தரப்பினரின் உடல்களையும் தகனம் செய்ய அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கு தமிழக அரசு சார்பில், ‛‛கிராம மக்களுக்கு மயானத்துக்கு நிலம்

ஒதுக்கியுள்ள போதிலும், குறிப்பிட்ட சமுதாயத்தினர், அதைப் பயன்படுத்த அனுமதிக்காததால் சாலை ஓரங்களில் உடல்களை எரிக்கும் நடைமுறையை பின்பற்றுகின்றனர். அனைத்துத் தரப்பினரும் மயானத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அரசுத்துறை அதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது", என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...