தமிழ்நாடு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியமான 425.40 ரூபாயை தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் அமல்படுத்தாமல் இழுத்தடித்து வருகின்றது.
கோவை: வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு ரூபாய் 426 சம்பளம் வழங்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எல்பி எஃப் தொழிற்சங்க தலைவர் கோழிக்கடை கணேசன் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இவற்றில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுடைய ஊதிய ஒப்பந்தம் கடந்த ஜூன் மாதமே முடிவுற்ற நிலையில் புதிய ஒப்பந்தம் எட்டப்படாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூபாய் 425.40 அறிவித்துள்ளது. இந்நிலையில் தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் இதை அமல்படுத்தாமல் இழுத்தடித்து வருகின்றது.
இதனைத்தொடர்ந்து, வால்பாறையில் உள்ள எல்பிஎஃப் தொழிற்சங்க தலைவரும், முன்னாள் நகர மன்றத் தலைவருமான கோழிக்கடை கணேசன் சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு அளித்தார்.
இந்நிகழ்வில், வால்பாறை முன்னாள் நகரமன்ற தலைவர் மற்றும் ஆனைமலை திராவிட தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் கோழிக்கடை கணேசன், கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வால்பாறை GKM மகுடீஸ்வரன், ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் வடை கடை குட்டி ஆகியோர் உடனிருந்தனர்.