வால்பாறையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ.426 சம்பளம் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க முதலமை‌ச்ச‌ருக்கு எல்பி எஃப் தொழிற்சங்க தலைவர் கோரிக்கை..!

தமிழ்நாடு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியமான 425.40 ரூபாயை தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் அமல்படுத்தாமல் இழுத்தடித்து வருகின்றது.


கோவை: வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு ரூபாய் 426 சம்பளம் வழங்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எல்பி எஃப் தொழிற்சங்க தலைவர் கோழிக்கடை கணேசன் முதலமை‌ச்ச‌ருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இவற்றில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுடைய ஊதிய ஒப்பந்தம் கடந்த ஜூன் மாதமே முடிவுற்ற நிலையில் புதிய ஒப்பந்தம் எட்டப்படாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூபாய் 425.40 அறிவித்துள்ளது. இந்நிலையில் தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் இதை அமல்படுத்தாமல் இழுத்தடித்து வருகின்றது.

இதனைத்தொடர்ந்து, வால்பாறையில் உள்ள எல்பிஎஃப் தொழிற்சங்க தலைவரும், முன்னாள் நகர மன்றத் தலைவருமான கோழிக்கடை கணேசன் சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு அளித்தார்.

இந்நிகழ்வில், வால்பாறை முன்னாள் நகரமன்ற தலைவர் மற்றும் ஆனைமலை திராவிட தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் கோழிக்கடை கணேசன், கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வால்பாறை GKM மகுடீஸ்வரன், ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் வடை கடை குட்டி ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...