வால்பாறையில் கோவில் ஜன்னல் கதவுகளை இடித்து சேதப்படுத்திய காட்டு யானைகள் - பொதுமக்கள் அச்சம்!!

காட்டு யானைகள் வந்ததை அறிந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வராமல் தடுக்க தீ மூட்டி விரட்டினர்.


கோவை: வால்பாறையில் கோவில் ஜன்னல் கதவுகளை இடித்து காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது பண்ணி மேடு தேயிலைத் தோட்டம். இந்த தோட்டத்தில் முதல் பிரிவில் அமைந்துள்ளது ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில்.



இந்த நிலையில், நேற்றிரவு இப்பகுதிக்கு வந்த 5 காட்டு யானைகள் இந்த கோவிலின் முன் கதவு ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தியது. மேலும், உள்ளே புகுந்த காட்டு யானைகள் அங்குள்ள பொருட்களை தூக்கி எறிந்து நாசப்படுத்தியது. மேலும் அப்பகுதியில் உள்ள மணிக்குமார் என்பவரின் ஸ்கூட்டரை கீழே தள்ளி சீட்டை கிழித்து சேதப்படுத்தியது.

இதையடுத்து, காட்டுயானைகள் இப்பகுதிக்கு வந்ததை அறிந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வராமல் தடுக்க தீ மூட்டி துரத்தினர். மேலும் தேயிலைத் தோட்ட காவலர்கள் லாரிகள் மூலம் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டினர்.

தொடர்ந்து காட்டு யானைகள் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால் இன்று இரவும் குடியிருப்பு பகுதிக்குள் வரலாம் என்ற அச்சத்தில் தொழிலாளர்கள் உள்ளனர்.

இதனால், வனத்துறையினரும் தேயிலைத் தோட்ட காவலர்களும் இணைந்து தீவிர ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...