கூடலூரில் காட்டு யானைகளை விரட்ட 2 கும்கி யானைகள் வரவழைப்பு..!

காட்டு யானைகளை விரட்ட முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து சங்கர், கிருஷ்ணா என்ற 2 கும்கி யானைகள் கூடலூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.



நீலகிரி: கூடலூரை அடுத்துள்ள மதுரை ஊராட்சியில் காட்டு யானைகளை விரட்ட 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா, மதுரை ஊராட்சியில் உள்ள கிராமங்களில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வீடுகளை இடித்து சேதப்படுத்தி வருகின்றன.

கோவையில் அட்டகாசம் செய்த விநாயகன் என்ற காட்டு யானையை வனத் துறையினர் பிடித்து, முதுமலை வனப்பகுதியில் விட்டனர். அந்த யானை தினமும் கூடலூர் - முதுமலை எல்லையோர கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

சமீபத்தில் ஓடக்கொல்லி பகுதியில் லீலா என்பவரது வீட்டை அந்த யானை சேதப்படுத்தியது. மேலும், விவசாயப் பயிர்களை நாசம் செய்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் கோழிகண்டி பகுதியை சேர்ந்த வாசு என்பவரது வயலில் நெற்பயிர்களை மிதித்து சேதப்படுத்தியது.

இதையடுத்து, பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் அந்த யானையை விரட்டினர். பின்னர் கரிக்கணக்கொல்லி, போலீஸ்மட்டம் இடங்களுக்கு விநாயகன் யானை சென்றது. இதனால், அங்குள்ள மக்கள் மற்றும் விவசாயிகள் இரவு முழுவதும் நிம்மதியாக தூங்க முடியாமல் அவதி அடைந்தனர். அந்த யானை ஊருக்குள் நுழைவதைத் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.



இதனைத் தொடர்ந்து, முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து சங்கர், கிருஷ்ணா என்ற 2 கும்கி யானைகள் கூடலூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.



இதையடுத்து, கூடலூர் வனச்சரகர் கணேசன் தலைமையிலான வனத்துறையினர் விநாயகன் யானை வரும் கிராமப் பகுதிகளில் கும்கி யானைகளுடன் ரோந்து சென்றனர். வனப்பகுதியிலிருந்து யானைகள் வெளியேறும் பகுதியில் இரண்டு கும்கி யானைகளும் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து வனத் துறையினர் கூறும்போது, கும்கி யானைகள் கிராமப் பகுதிகளில் முகாமிட்டுள்ளதை உணர்ந்தால் விநாயகன் யானை ஊருக்குள் வராது என்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...