கோவை தங்கம் மருமகன் ஜாமீன் மனு தள்ளுபடி.

நேற்று ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவிநாசி கிளை சிறையில் இருந்த, அருண் பிரகாஷ்க்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், கோவை அரசு மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டார்.

கோவை: கோவையை சேர்ந்த பெண் தொழிலதிபர் மற்றும் அவருடைய தகப்பனாரிடம் கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்ட கோவை தங்கம் மருமகன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

கோவை, காளப்பட்டியை சேர்ந்தவர் சிந்துஜா. ஏற்கனவே, திருமணமாகி கணவனை பிரிந்த இவர், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில்,முன்னாள் எம்.எல்.ஏ., கோவை தங்கத்தின் மருமகன் அருண்பிரகாஷ்,41, மீது பணமோசடி புகார் அளித்தார்.

அதில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிய அருண் பிரகாஷ், கூட்டாக தொழில் செய்யலாம் என்று கூறி 1.5 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்து விட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். பணத்தை திருப்பி கேட்டதற்கு போலி காசோலைகள் கொடுத்து ஏமாற்றியதாக, சிந்துஜாவின் தந்தை செங்குட்டுவன் அளித்த புகாரில் போலீசார் அருண்பிரகாஷை கடந்த 19 ஆம் தேதி கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

அவரை ஜாமினில் விடுவிக்க கோரி, ஜே.எம்:7, கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை, விசாரித்த மாஜிஸ்திரேட் தமிழினியன், அருண் பிரகாஷின் ஜாமீன் மனுவை நேற்று தள்ளுபடி செய்தார். 

இதற்கிடையில், அவிநாசி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த, அருண் பிரகாஷ்க்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், கோவை அரசு மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...