கோவையில் பேருந்தில் சென்ற பெண்ணிடம் திருடிய ஏடிஎம் கார்டு மூலம் 44-ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு.!!

பேருந்தில் சென்ற பெண்ணிடம் திருடிய ஏடிஎம் கார்டு மூலம் 44-ஆயிரம் ரூபாய் பணம் திருடிய சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: பேருந்தில் சென்ற பெண்ணிடம் திருடிய ஏடிஎம் கார்டு மூலம் 44-ஆயிரம் ரூபாய் பணம் திருடிய சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை அப்ப நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மனைவி விஜயநிர்மலா(43). இவர் நேற்று துடியலூரில் இருந்து தனது மகளுடன் பேருந்தில் வந்து கொண்டிருந்தார்.

டவுன்ஹால் அருகே இறங்கும்போது பையில் வைத்திருந்த பர்ஸ் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பர்ஸில் 3-ஏடிஎம் கார்டுகளை அவர் வைத்திருந்தார். சிறிது நேரத்தில் அவரது கனரா வங்கி ஏடிஎம் கார்டு மூலம் 44-ஆயிரம் ரூபாய் பணம் எடுத்ததாக குறுந்தகவல் வந்தது.

இதை அடுத்து விஜயநிர்மலா வெறைட்டிஹால் ரோடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...