உஷார் மக்களே... உஷார்... சரவணம்பட்டியில் பூட்டிய வீடுகளை குறிவைக்கும் கொள்ளை கும்பல்.!!

கோவை சரவணம்பட்டி பகுதியில் 2-வீடுகளை உடைத்து 30-பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கம் கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறை வலைவீசி தேடி வருகின்றனர்.


கோவை: கோவை சரவணம்பட்டி பகுதியில் 2-வீடுகளை உடைத்து 30-பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கம் கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறை வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவை பி.என். புதூர் அருகே உள்ள முல்லை நகரைச் சேர்ந்தவர் ஆனந்த சபீசன் வயது 33, இவர் கீரணத்தத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 27-ஆம் தேதி தனது வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் கும்பகோணத்துக்குச் சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பின்னர் அறையிலிருந்த பீரோவைத் திறந்து அதிலிருந்த ஆரம், செயின், வளையல், கம்மல் - மோதிரம், தங்க நாணயம் உட்பட 16-பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

வீட்டிற்குத் திரும்பிய ஆனந்த் சபீசன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தார். காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல விநாயக நகரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் 62, இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டி விட்டு மனைவியுடன் பெங்களூருக்குச் சென்றார்.

நேற்று வீடு திரும்பினார் அவர் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டுத் திறந்து கிடந்தது. பீரோவிலிருந்த 14-பவுன் நகை ஒரு லட்சம் ரொக்கம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்தடுத்து ஒரே பகுதியில் கொள்ளை நடந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...