சனிக்கிழமை நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து, நல்லட்டிபாளையம் ஆரம்பச் சுகாதார நிலைய செவிலியர்கள் சார்பில் சிறப்பு வீடியோ வெளியீடு.
கோவை: சனிக்கிழமை நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து, நல்லட்டிபாளையம் ஆரம்பச் சுகாதார நிலைய செவிலியர்கள் சார்பில் சிறப்பு வீடியோ வெளியீடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 100-சதவிகித தடுப்பு ஊசி செலுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மெகா தொடர் முகாம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் சைவப் பிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மெகா கொரோனா தடுப்பு முகாமில் தடுப்பூசி போட வருவதில்லை என கூறப்பட்டது.
இதனால் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வந்த கொரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடத்த தமிழக அரசு முடிவு செய்ததுள்ளது. இதையடுத்து வருகிற சனிக்கிழமை 23-ம் தேதி தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இந்த நிலையில் சனிக்கிழமையில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம் ஆரம்பச் சுகாதார நிலைய செவிலியர்கள் கொரோனா தடுப்பூசி குறித்துச் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் செவிலியர்கள் கொரோனா தடுப்பூசி இன்னும் போடவில்லையா என்றும், சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அதில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.